ADDED : ஜூலை 25, 2024 05:22 AM
புதுச்சேரி: முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் திவ்யா. இவர் இணைய தளத்தில் முதலீடு செய்வது தொடர்பாக இன்ஸ்டா கிராமில் தேடினார். அதன் மூலமாக மர்ம நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது தொடர்பாக பேசினார். அதை நம்பி, அவர், 3.91 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார்.
வைத்திகுப்பத்தை சேர்ந்த தனசேகரன், மர்ம நபர் கூறியதை நம்பி, 2.79 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் போலீஸ் அதிகாரி போல் பேசினார். அதில், உங்களுக்கு பார்சலில் போதை பொருட்கள் இருப்பதாகவும், அதற்கு அபராதம் கட்ட வேண்டும் என, கூறினார். அதற்கு பயந்து அவர் 1.19 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
கல்மண்டபத்தை சேர்ந்த பத்மநாபன், 70 ஆயிரம் ரூபாய், அரியாங்குப்பம் பாலமுருகன், 46 ஆயிரம், சூரமங்கலம் சந்தியா 10 ஆயிரம் ரூபாயை மர்ம கும்பலிடம் ஏமாந்தனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.