/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணை தாக்கிய மகளிர் சுய உதவிகுழு தலைவி மீது வழக்கு பெண்ணை தாக்கிய மகளிர் சுய உதவிகுழு தலைவி மீது வழக்கு
பெண்ணை தாக்கிய மகளிர் சுய உதவிகுழு தலைவி மீது வழக்கு
பெண்ணை தாக்கிய மகளிர் சுய உதவிகுழு தலைவி மீது வழக்கு
பெண்ணை தாக்கிய மகளிர் சுய உதவிகுழு தலைவி மீது வழக்கு
ADDED : ஜூன் 19, 2024 11:25 PM
புதுச்சேரி : போலீஸ் நிலையம் முன்பு பெண்ணை தாக்கிய சுய உதவிக்குழு தலைவி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டை புதுப்பேட் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஜான்சன் மனைவி நிர்மலா. சுய உதவி குழு தலைவி. இவரது சுய உதவி குழுவில் உள்ள பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் பெற்று வழங்கி வந்தார். குழுவில் கடன் வாங்க விருப்பம் இல்லாத பெண்களின் பெயரில் நிர்மலா கடன் பெற்று, அதற்கான மாத தவணை செலுத்தி வந்தார்.
இவரது மகளிர் சுயஉதவி குழுவில் உள்ள வெங்கட்டா நகர் மஞ்சுமாதேவி பெயரில் கடன் பெற்று சில மாத தவணை மட்டும் செலுத்தினார். கடந்த 4 மாத தவணை செலுத்தவில்லை.
இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் மஞ்சுமாதேவி புகார் அளிக்க வந்தார். அங்கு வந்த நிர்மலா, மஞ்சுமாதேவியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார்.
இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் நிர்மலா மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.