/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசில் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ., தலைமை திட்டம் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு அரசில் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ., தலைமை திட்டம் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
அரசில் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ., தலைமை திட்டம் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
அரசில் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ., தலைமை திட்டம் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
அரசில் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ., தலைமை திட்டம் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 13, 2024 05:48 AM

புதுச்சேரி: புதுச்சேரிபா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள விரிசலால், இந்த அரசு ஸ்திரத்தன்மையை இழந்துள்ளதாக, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டி உள்ளார்.
அவர்,கூறியதாவது:
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களே, இந்த அரசின் மீதும், பா.ஜ., அமைச்சர்கள் மீதும் பல குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். பா.ஜ., தலைமையும் இந்த விஷயத்தில் வாய்மூடி மவுனம் காத்து வருகிறது.
இந்த விவகாரத்தில்,பா.ஜ., தலைமையே ஆளும் அரசில், குழப்பத்தை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளதா என, தெரியவில்லை.
அப்படி இல்லை எனில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேசியிருக்க வேண்டும்.
சட்டமன்ற கூட்டத்தொடர் 10 தினங்களில் நடக்க இருக்கும் நிலையில் ஆளும் ஆட்சியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள விரிசலால், இந்த அரசு ஸ்திரத்தன்மையை இழந்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து ஏதோ ஒரு சாராயக்கடையில் விற்கப்பட்ட சாராயத்தைகுடித்ததால் தான் தமிழகத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது.
இதுபோன்ற தவறான குற்றசாட்டுகளை கூட ஆளும் அரசுஅல்லது கலால்துறையின் உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்காதது தவறு. இது புதுச்சேரி மாநிலத்திற்கு தமிழக தி.மு.க., அரசால் திட்டமிட்டு அவப்பெயரை உருவாக்கும் செயலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது' என்றார்.
மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாராமன், மாநில இணைச் செயலாளர் கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.