ADDED : ஜூலை 13, 2024 12:34 AM

புதுச்சேரி: சாரம் பகுதியில் நடராஜருக்கு நடந்த ஆனி திருமஞ்சன வழிபாட்டில் ஏராளானோர் தரிசனம் செய்தனர்.
புதுச்சேரிசாரம் பகுதியில்,சுப்ரமணியர் கோவில் உள்ளது. அங்கு அமைந்துள்ள உற்சவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆனி திருமஞ்சன வழிபாடு நேற்று நடந்தது. இதில் சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. உற்சவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
இந்த வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் அதிகாரி நீலகண்டன், அர்ச்சகர்கள் சிவராமன், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.