Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குரூப்-பி பணியிடங்களுக்கு வயது தளர்வு மறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்

குரூப்-பி பணியிடங்களுக்கு வயது தளர்வு மறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்

குரூப்-பி பணியிடங்களுக்கு வயது தளர்வு மறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்

குரூப்-பி பணியிடங்களுக்கு வயது தளர்வு மறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்

ADDED : ஜூலை 13, 2024 05:49 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் குரூப்-பி பணியிடங்கள் வயது தளர்வு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரியில்குரூப்-சி பிரிவு இடங்கள் இரண்டு ஆண்டு வயது தளர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. இதே வழியில் குரூப்-பி பதவிக்கான வயது வரம்பை தளர்த்த முடியாது என, மத்திய அரசு கைவிரித்திருப்பது இந்த அரசின் செயலின்மையையும், இளைஞர்களின் எதிர்காலம் பற்றி இந்த அரசு கொண்டுள்ள மெத்தனத்தையும் காட்டுகிறது.

வயது தளர்வை மறுப்பதற்கு மத்திய அரசு கூறும் காரணம் என்ன. குரூப் சி அளித்த வயது தளர்வை ஏன் பி குரூப்பிற்கு அளிக்க மறுக்கின்றனர். குரூப்-சி, குரூப்-பி ஆகிவைகளில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும்போது மத்திய அரசின் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் என்ன.

மாநிலத்தின் உரிமை, வேலை வாய்ப்பு போன்ற விஷயங்களில் அமைச்சர்கள் நேரடியாக டில்லி சென்று சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து தீர்வு காண்பதில்லை. சப்-இன்ஸ்பெக்டர் போன்ற குரூப்-பி பதவிகளுக்கு வயது தளர்வு தருவோம் என, அறிவித்து புதுச்சேரி இளைஞர்களை எதிர்பார்க்கச் செய்து, இன்று இயலாது என்று கைவிரிக்கும் இந்த துரோகச் செயலை தி.மு.க., கண்டிக்கிறது.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக தீர்வு கண்டு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us