/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாங்கனி திருவிழாவில் பிக்ஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடு நிகழ்ச்சி மாங்கனி திருவிழாவில் பிக்ஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடு நிகழ்ச்சி
மாங்கனி திருவிழாவில் பிக்ஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடு நிகழ்ச்சி
மாங்கனி திருவிழாவில் பிக்ஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடு நிகழ்ச்சி
மாங்கனி திருவிழாவில் பிக்ஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 20, 2024 09:15 PM

காரைக்கால் : காரைக்கால் மாங்கனி திருவிழா முன்னிட்டு நேற்று இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை மற்றும் மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது. நேற்று காலை முக்கிய நிகழ்ச்சியான பரமதத்தர் மற்றும் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வெகுவிமர்ச்சியாக நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 7மணிக்கு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
இன்று 21ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி திருவிழா நடக்கிறது. இதில் பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர்.தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.