/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா இன்று நடக்கிறது காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா இன்று நடக்கிறது
காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா இன்று நடக்கிறது
காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா இன்று நடக்கிறது
காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா இன்று நடக்கிறது
ADDED : ஜூன் 20, 2024 09:14 PM
காரைக்கால்: காரைக்காலில் இன்று பிரச்சித்தி பெற்ற மாங்கனித்திருவிழா நடக்கிறது.
கரைக்காலில் 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா முக்கிய நிகழ்ச்சியான இன்று (21ம் தேதி) அதிகாலை 3மணிக்கு பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடக்கிறது. காலை பரமதத்தர் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9மணிக்கு பவழக்கால் விமானத்தில் சிவபெருமாள் காவியுடை, ருத்திராட்சம் மாலையுடன் பிச்சாண்டவர் கோலத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
பக்தர்கள் சுவாமிக்கு மாங்கனி வைத்து தீபாரதனை செய்து.பின் வீட்டின் மாடிகளின் இருந்து மாங்கனி வீசும் வைபவம் நடக்கிறது.
மாலை 6 மணிக்கு அடியார் கோலத்தில் திருமாளிகையில் எழுந்தருளும் சிவபெருமானை புனிதவதியார் அழைத்து வந்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சியும், இரவு. 8.30 மணிக்கு பரமதத்தர் மனைவி புனிதவதியிடம் மற்றொருக் கனியைக் கேட்க அப்போது புனிதவதியார் சிவானை வேண்டி மாங்கனியை வரவழைத்துக் கொடுத்த அவரது அற்புதக்காட்சியை கண்டு அதிர்ந்த பரமதத்தர் கப்பல் ஏறிப்பாண்டிய நாடாகிய ஸ்ரீசித்தி விநாயகர் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 11மணிக்கு பரமத்தர் செட்டியார் இரண்டாது திருமணமும், இரவு புஷ்ப பல்லாக்கில் வீதியுலா நடக்கிறது. நாளை (22ம் தேதி) அதிகாலை அம்மையார் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.