/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 24, 2024 04:47 AM

புதுச்சேரி, : புதுச்சேரி அரசு பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம், தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலேரியா எதிர்ப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை மருத்துவ அதிகாரி அஸ்மா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சுகாதார உதவி ஆய்வாளர் இளஞ்செழியன் வரவேற்றார்.
சுகாதார உதவி ஆய்வாளர் ஜவகர் நோக்க உரையாற்றினார். பள்ளியின் நிர்வாக தலைவர் கிரண்குமார், தாளாளர் எழிலரசி, முதல்வர் உமா முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் ஆனந்தா நகர் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மலேரியா விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், ஆசிரியர்கள் சகிலா, கார்முகிலன், ஆர்த்தி, ரம்யா, ராஜலட்சுமி, சினேகா, கலையரசி, தீனதயாளன் ஆகியோர் செய்திருந்தனர்.