ADDED : ஜூன் 24, 2024 04:53 AM
புதுச்சேரி : மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
உறுவையாறு, செல்வா நகர், 5வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் பத்மஸ்ரீ, 21; டிகிரி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தனர்.
கடந்த 20ம் தேதி காலை பத்மஸ்ரீ கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து தாய் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.