/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதை தடுக்க 'மிதக்கும் குப்பைகள் தடுப்பு' அமைப்பு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதை தடுக்க 'மிதக்கும் குப்பைகள் தடுப்பு' அமைப்பு
பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதை தடுக்க 'மிதக்கும் குப்பைகள் தடுப்பு' அமைப்பு
பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதை தடுக்க 'மிதக்கும் குப்பைகள் தடுப்பு' அமைப்பு
பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதை தடுக்க 'மிதக்கும் குப்பைகள் தடுப்பு' அமைப்பு
ADDED : ஜூன் 24, 2024 04:47 AM

புதுச்சேரி, : ப்பனாறு பெரியவாய்க்காலில் வரும் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதை தடுக்க, மிதக்கும் குப்பை தடுப்பான் மிதவை அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சி காலத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கலாக இருந்த உப்பனாறு மற்றும் பெரிய வாய்க்கால் தற்போது கழிவுநீர் ஓடும் வாய்க்கால்களாக மாறிவிட்டது. இரு வாய்க்கால்களும் உப்பளம் புதிய துறைமுக வாய்க்கால் பகுதியில் கலக்கிறது. இதில், கழிவுநீருடன் பிளாஸ்டிக் டப்பாக்கள், டயர், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பை அதிக அளவில் கலந்து வருகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்கவும், புதுச்சேரி துறைமுகம் புதிய திட்டத்தை உருவாக்கியது. அதன்படி, ரூ. 15.5 லட்சம் மதிப்பில், மிதக்கும் குப்பை தடுப்பு அமைப்பை உருவாக்கினர்.
42 மீட்டர் நீளம், 1 மீட்டர் ஆழத்துடன், மிதக்கும் பிளாஸ்டிக் பேரல்களுடன், இரும்பு தடுப்பு கம்பிகளுடன் கூடிய தடுப்பு மிதவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உப்பனாறு, பெரிய வாய்க்காலில் வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ரப்பர் டயர்கள் உள்ளிட்டவை கடலுக்கு செல்வது தடுக்கப்படுகிறது.
துறைமுக அதிகாரிகள் கூறுகையில், உப்பனாறு, பெரிய வாய்க்கால் சந்திக்கும் இடத்தில் இந்த மிதக்கும் குப்பைகள் தடுப்பான் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டி கழிவுகள் கடலில் கலப்பதை தடுப்பதிற்கான ஒரு சோதனை முயற்சி. இங்கு தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் வாரம் ஒரு முறை அகற்றப்பட்டு வருகிறது. கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலக்கப்படும் இடங்களில் இதுபோன்ற தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினர்.