/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதிய குற்றவியல் சட்டத்தை கண்டித்து அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி ஆர்ப்பாட்டம் புதிய குற்றவியல் சட்டத்தை கண்டித்து அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி ஆர்ப்பாட்டம்
புதிய குற்றவியல் சட்டத்தை கண்டித்து அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி ஆர்ப்பாட்டம்
புதிய குற்றவியல் சட்டத்தை கண்டித்து அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி ஆர்ப்பாட்டம்
புதிய குற்றவியல் சட்டத்தை கண்டித்து அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 04:05 AM

புதுச்சேரி : புதிய குற்றவியல் சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் குணசேகரன், சுதர்சன், கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கண்டன கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன் பேசியதாவது;
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 3 புதிய குற்றவியல் சட்டங்களை அவசர கோலத்தில் அமல்படுத்தி உள்ளனர். மாநில அரசுகளிடம் கருத்து கேட்காமல் 3 சட்டங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தில் 152வது பிரிவின்படி, அரசுக்கு எதிராக பேசுபவரை கைது செய்யலாம் என இருப்பது பேச்சுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளனர். பல மனித உரிமை மீறல்களுக்கு வழி காட்டப்பட்டுள்ளது. கை விலங்கு போடும் அதிகாரம் இச்சட்டம் வழங்கி உள்ளது. புதிய சட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்யவும், குளறுபடிகளை நீக்க மத்திய அரசு சட்ட வல்லுநர் குழு அமைத்து அமுல்படுத்த வேண்டும் என பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ராஜசுந்தரம், மதன், கோபி, குணசேகரன், கண்ணன், வேலு, அவை தலைவர் அன்பானந்தம், துணை தலைவர் ராஜாராமன், முன்னாள் எம்.எல்.ஏ., கோமளா,இணை செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.