/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலி சான்றிதழ் வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி., போலீசில் ஒப்படைப்பு போலி சான்றிதழ் வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி., போலீசில் ஒப்படைப்பு
போலி சான்றிதழ் வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி., போலீசில் ஒப்படைப்பு
போலி சான்றிதழ் வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி., போலீசில் ஒப்படைப்பு
போலி சான்றிதழ் வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி., போலீசில் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 09, 2024 04:06 AM
கிள்ளை, : சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த வழக்கு ஆவணங்கள் மற்றும் பறிமுதல் செய்த பொருட்கள் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிதம்பரம் அடுத்த மீதிக்குடி சாலையோரத்தில் கடந்த மாதம் போலி கல்லுாரி மற்றும் பல்கலை சான்றிதழ்கள் கிடந்தது.
இதுகுறித்து அண்ணாமலை பல்க்லைக்கழக பதிவாளர் பிரபாகர்(பொறுப்பு) கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த சிதம்பரம் மன்மதசாமி நகர் நடராஜரத்தின தீட்சதர் மகன் சங்கர்,37; மீதிக்குடி நாகப்பன், 48; ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், இவர்கள் ஆயிரக்கணக்கி்ல போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளதால், பல மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பிருக்கலாம் என்பதால், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதனையொட்டி சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கியுள்ளதால், இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பிரிண்டர், லேப்டாப், மொபைல் போன்கள், போலி சான்றிதழ்களை நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் கிள்ளை இன்ஸ்பெக்டர் கல்பனா, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் ஒப்படைத்தனர்.