/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மஞ்சள் நீராட்டு விழாவில் தாய்மாமன் சீர் வரிசை சங்கராபுரம் அருகே மக்கள் வியப்பு மஞ்சள் நீராட்டு விழாவில் தாய்மாமன் சீர் வரிசை சங்கராபுரம் அருகே மக்கள் வியப்பு
மஞ்சள் நீராட்டு விழாவில் தாய்மாமன் சீர் வரிசை சங்கராபுரம் அருகே மக்கள் வியப்பு
மஞ்சள் நீராட்டு விழாவில் தாய்மாமன் சீர் வரிசை சங்கராபுரம் அருகே மக்கள் வியப்பு
மஞ்சள் நீராட்டு விழாவில் தாய்மாமன் சீர் வரிசை சங்கராபுரம் அருகே மக்கள் வியப்பு
ADDED : ஜூலை 09, 2024 04:00 AM

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மஞ்சள் நீராட்டு விழாவிற்கு, தாய் மாமன் சீராக 20 அடி உயரமும், 40 கிலோ எடையும் உள்ள ரோஜா மாலையை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஊர்வலமாக கொண்டு சென்றது வியப்பில் ஆழ்த்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பு. இவரது மகள் சுபஸ்ரீயின் மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடந்தது.
விழாவை அசத்தலாக நடத்த முடிவு செய்த சுபஸ்ரீயின் தாய் மாமன்கள் 20 அடி நீளமுள்ள 40 கிலோ ரோஜா மாலை மற்றும் 224 சீர் வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலத்தில் கேரளா செண்டை மேளம் முழுங்க ஆடல் பாடலுடன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று 20 அடி நீளமுள்ள ரோஜா மாலையை பொக்லைன் இயந்திரம் முலம் சுபஸ்ரீக்கு அணிவித்து சீர் செய்தது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.