ADDED : ஜூலை 20, 2024 04:56 AM

புதுச்சேரி: உலக முத்து மாரியம்மன் கோவிலில் நடந்த ஆடி முதல் வெள்ளிக்கிழமை வழிபாட்டில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி, பாரதி வீதியில், உலக முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று ஆடி மாதம், முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகமும், 9:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது.
இதைத்தொடர்ந்து மாட வீதிகளில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்த வழிபாட்டில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஆளவந்தார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.