/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாஸ்பேட்டையில் 42 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் லாஸ்பேட்டையில் 42 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்
லாஸ்பேட்டையில் 42 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்
லாஸ்பேட்டையில் 42 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்
லாஸ்பேட்டையில் 42 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்
ADDED : ஜூலை 20, 2024 04:57 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை உழவர்சந்தை பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை விற்பனை செய்த நபரிடம் 42 கிலோ நெகிழிப் பைகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி(பிளாஸ்டிக்) பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்யும் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினர் லாஸ்பேட்டை உழவர்சந்தை மார்க்கெட் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆட்டோ வாகனத்தில் கடைக்கு தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை விற்பனை செய்த நபரிடமிருந்து 42 கிலோ நெகிழிப்பைகளை பறிமுதல் செய்து, ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஜூலை மாதம் இதுவரை மட்டுமே ரூ.30, 550 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆணையர் சுரேஷ்ராஜ், இதுபோன்று நெகிழிப் பைகளை வாகனங்களில் வைத்து விற்பனை செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் கடைக்குச் செல்லும் போது, துணி பைகள் மற்றும் பாத்திரம் எடுத்துச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தினார்.