/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைப் லைன் அமைக்க பள்ளம் தோண்டிய போது சிமென்ட் சிலாப் சரிந்து விழுந்து விபத்து கர்நாடகாவைச் சேர்ந்த கூலி தொழிலாளி பலி பைப் லைன் அமைக்க பள்ளம் தோண்டிய போது சிமென்ட் சிலாப் சரிந்து விழுந்து விபத்து கர்நாடகாவைச் சேர்ந்த கூலி தொழிலாளி பலி
பைப் லைன் அமைக்க பள்ளம் தோண்டிய போது சிமென்ட் சிலாப் சரிந்து விழுந்து விபத்து கர்நாடகாவைச் சேர்ந்த கூலி தொழிலாளி பலி
பைப் லைன் அமைக்க பள்ளம் தோண்டிய போது சிமென்ட் சிலாப் சரிந்து விழுந்து விபத்து கர்நாடகாவைச் சேர்ந்த கூலி தொழிலாளி பலி
பைப் லைன் அமைக்க பள்ளம் தோண்டிய போது சிமென்ட் சிலாப் சரிந்து விழுந்து விபத்து கர்நாடகாவைச் சேர்ந்த கூலி தொழிலாளி பலி
ADDED : ஜூன் 06, 2024 02:27 AM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே காஸ் பைப் லைன் புதைக்கும் பணியில் ஈடுபட்ட வெளிமாநில கூலித் தொழிலாளர்கள் சிமென்ட் சிளாப் சரிந்து விழுந்ததில் இடிபாடுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
கெயில் நிறுவனம் சார்பில் தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு பைப் லைன் மூலம் காஸ் வினியோகம் செய்தவதற்கு இரும்பு பைப் லைன் பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோரம் பள்ளம் எடுத்து பைப் லைன் பதிக்கும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை பீகார், ஒரிசா, கர்நாடகா உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணியளவில் பிள்ளையார்குப்பம் ஐய்யனார் கோவில் அருகே மின்சார டிரான்ஸ்பார்மிற்கு அமைக்கப்பட்ட சிமென்ட் தடுப்பு கட்டை அடுக்கிவைத்திருந்த பகுதியில், பைப் லைன் அமைப்பதற்கு மூன்று தொழிலாளர்கள் பள்ளத்தில் இறங்கி வேலை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது சிமென் சிளாப்கள் திடீர் என சரிந்து பள்ளத்தில் விழுந்துள்ளது. இதில் கர்நாடகவை சேர்ந்த சிவபுத்ரா,37; பீகாரை சேர்ந்த அருண்குமார்,27; ஆகியோர் சிக்கிகொண்டனர். மற்றொரு தொழிலாளர் தப்பினார்.
உடன் அருகில் இருந்த தொழிலாளர்கள் படுகாயமடைந்த அருண்குமாரை மீட்டனர். அடியில் சிக்கிகொண்ட சிவபுத்ராவை மீட்க முடியாமல் சிரமப்பட்டனர். இது குறித்து வில்லியனுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனுார் மற்றும் சேதராப்பட்டு தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய சிவபுத்ராவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சிவபுத்ரா உடலை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அருண்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வில்லியனுார் சப் -இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.