/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் 1.5 லட்சம் மரங்கள் நடும் திட்டம் சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா துவங்கி வைப்பு புதுச்சேரியில் 1.5 லட்சம் மரங்கள் நடும் திட்டம் சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா துவங்கி வைப்பு
புதுச்சேரியில் 1.5 லட்சம் மரங்கள் நடும் திட்டம் சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா துவங்கி வைப்பு
புதுச்சேரியில் 1.5 லட்சம் மரங்கள் நடும் திட்டம் சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா துவங்கி வைப்பு
புதுச்சேரியில் 1.5 லட்சம் மரங்கள் நடும் திட்டம் சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா துவங்கி வைப்பு
ADDED : ஜூன் 06, 2024 02:25 AM

புதுச்சேரி: ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் உள்ள விவசாய நிலங்களில் 1,50,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கம் சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இதன் துவக்க விழா கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் நேற்று நடந்தது. சீனியர் எஸ்.பி., நாரா சைத்தன்யா முதல் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர்பேசியதாவது:
இன்றைக்கு மாசுபட்ட காற்று, உணவு மற்றும் ஏராளமான கண்ணுக்கு தெரியாத நோய்கள், காலநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
திடீரென வரும் வெள்ளம், அதீத வெப்பம் என பல பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். கால நிலை மாற்றம் சார்ந்த கொள்கைகள் வகுப்பது இந்த தருணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு புதுச்சேரியில் மட்டும்1,00,000 மரங்களும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதிலும் ஒரு கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது.
இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளைஇலவசமாக வழங்கிவருகிறது.
மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்குசென்று வழங்கி வருகின்றனர்.
விவசாயிகள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.