Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும் ; ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு

ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும் ; ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு

ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும் ; ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு

ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும் ; ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு

UPDATED : ஜூன் 30, 2025 11:28 AMADDED : ஜூன் 30, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்; ''கிராம கோயில் பூஜாரிகள் ஆன்மிக போதனைகள்மூலம் மதமாற்றத்தை தடுக்க வேண்டும்'' என தமிழ்நாடு வி.எச்.பி., மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தெரிவித்தார்.

ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் ஜூன் 15ல் தமிழ்நாடு வி.எச்.பி., சார்பில் கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு பயிற்சி முகாம் துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் நடந்தது.

நேற்று நிறைவு விழாவையொட்டி கோசுவாமி மடத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பூஜாரிகள் பூணுால் அணிந்தனர். பயிற்சிக்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியதாவது:

மதசார்பற்ற நம்நாட்டில்அதுவும் தமிழகத்தில் ஹிந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதுதான் நம் பலவீனம். இதனை மீட்க நாம் போராட வேண்டும். அக்காலத்தில் கோயிலுக்கு ஆன்மிக பெரியோர்கள் தானமாக கொடுத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இன்று அரசியல்வாதிகள் கபளீகரம் செய்கின்றனர்.

இழிவுபடுத்த ஒரு கும்பல்


ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம் முதல் தற்போது வரை மதமாற்றம்நடக்கிறது. இது ஹிந்து சமூகத்திற்கு பேரழிவு ஆகும். எனவே கிராமங்களில் ஆன்மிக போதனைகள் மூலம் மக்களிடம் ஹிந்து மதத்தின் புனிதம், கடவுளின் வரலாற்று கதைகளை விளக்கி தெய்வ நம்பிக்கை ஏற்படுத்தி மத மாற்றத்தை தடுக்க வேண்டும். நம் மதத்தையும், கிராம கோயில் பூஜாரிகளையும் இழிவுபடுத்த ஒரு கும்பல் அலைகிறது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. இதுதான் நீங்கள்நம் நாட்டிற்கு செய்ய தர்மம் என்றார்.



கிராம கோவில்களே இந்து சமுதாயத்தின் ஆணிவேர். கோவில்களுக்கு நமது முன்னோர் இடங்களை தானமாக கொடுத்தனர். கோவில்கள் மூலமாக மக்களுக்கு இலவச கல்வி கிடைக்க வேண்டும். அன்னதானம் கிடைக்க வேண்டும் என வழிவகை செய்தனர். இப்போது, நகரங்களில் ஏராளமான கோயில் கட்டடங்களுக்கு போதிய வருவாய் வராமல் பாக்கி வைத்துள்ளனர். வசூலிக்க வழி வகை இல்லை.

கோர்ட்டுக்கு அலைகிறார்கள். இந்து கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும்.

கிராமக்கோவில் பூஜாரிகள், தங்கள் பகுதி மக்களை கோயிலுக்கு அழைத்து வரவேண்டும். குழந்தைகளுக்கு நீதிக் கதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மதம் மாறியவர்களை தாய்மதமான இந்து மதத்திற்கு அழைத்து வரவேண்டும். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சென்னையில் உள்ள விசுவ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் ஏராளமானோர் தாய்மதம் திரும்புகின்றனர்.


கிராம கோவில் பூஜாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்; ரூ.4 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதை, ரூ.5 ஆயிரமாக்க வேண்டும். இப்போது ஊக்கத்தொகையாக ரூ.1,500 கொடுப்பதாக அறிவித்துள்ளதை அதை செயல்படுத்தவேண்டும்.

இவ்வாறு ஆர்ஆர். கோபால்ஜி பேசினார்.

கிராம கோவில் பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் செயல்தலைவர் செல்லமுத்து, பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜாசேஷாத்ரி, மாநில இணை அமைப்புச்செயலாளர் பொன்கி.பெருமாள், மாநில இணைப்பொதுச் செயலாளர்கள் கணேசன், விஜயகுமார், ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற பூஜாரிகளுக்கு நாடார் மஹாஜனசங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் சான்றிதழ்களை வழங்கினார்.

மொழி அரசியல் எதிரானது!


பயிற்சி முகாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் பூஜை, கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி நடக்க வேண்டும். அதை மீறி மொழி அரசியல் கூடாது. மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும்.

குழந்தை பிறப்பில் நாட்டின் சராசரி 1.9ஆக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அது, 1.4ஆக குறைந்திருப்பது அபாய எச்சரிக்கை. இதனால், குடும்ப அமைப்பு சீரழியும்.

இந்து பெண்கள் குறைந்தது 3 குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வேண்டும்.

கோவில்களில் கட்டண தரிசன முறையை கைவிட வேண்டும். பென்ஷன் பெறும் கிராமக் கோவில் பூஜாரிகள் மறைவுக்கு பிறகு, அவர் மனைவிக்கு வழங்க வேண்டும்.

கிராமக் கோவில் நலவாரியத்தை செயல்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை எளிதாக்க வேண்டும். எல்லா கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இந்து கோவில் சொத்துக்களில் மாற்று மதத்தவருக்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்ய வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்று நடக்காதபடி இந்துசமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

கோவில் தொடர்புடைய பணிகளில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். மாற்று மதத்தினரை பணியமர்த்தக்கூடாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us