Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்

விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்

விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்

விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்

ADDED : ஜூன் 30, 2025 08:00 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'திருமண செலவை ஏற்பேன்; சொந்த வீடு கட்டித் தருவேன் என, விதவிதமான பொய்களை சொல்லி, கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாயிலாக, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தேன்' என, கைதான முனீர் உசேன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில், போலி கால்சென்டர் நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்த முனீர் உசேன், 36; அசோகன், 44 ஆகியோரை, 'சைபர் கிரைம்' போலீசார் உதவியுடன், மத்திய குற்றப்பிரிவு போலீ சார் கைது செய்துள்ளனர்.

போலீசாரிடம் முனீர் உசேன் அளித்துள்ள வாக்குமூலம்: நான் வி.சி., கட்சி நிர்வாகி போல, காரில் அக்கட்சி கொடியை கட்டி வலம் வந்தேன். 2020ம் ஆண்டு, போலி கால்சென்டர் நடத்தி பண மோசடி செய்தது தொடர் பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டேன்.

அப்போது, என்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும், போலி கால்சென்டர் நடத்தினேன். கட்டடங்களை வாடகைக்கு எடுப்பேன். ஆனால், என் பெயரில் ஒப்பந்தம் போடமாட்டேன். உறவினர்களின் பெயரில் ஒப்பந்தம் செய்வேன்.

அதன்பின், அவர்களின், மனைவி, தாயார் ஆகியோர் பெயரில், நானே போலி ஒப்பந்தம் தயார் செய்வேன். போலீசாருக்கு சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக, இந்த ஏற்பாடுகளை செய்து வந்தேன்.

காப்பீடு நிறுவனங்கள் மற்றும் முன்னணி வங்கிகள் பெயரில், முதலீட்டாளர்களை ஏமாற்றி, கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து வந்தேன். இதற்கு பலி ஆடுகளாக கிராமப்புற இளம் பெண்கள் மற்றும் வாலிபர்களை தேர்வு செய்வேன்.

அவர்களின் திருமண செலவை நானே ஏற்றுக் கொள்வதாக, ஒப்பந்த பத்திரம் தயார் செய்து, நம்ப வைப்பேன். சொந்த வீடு கட்டித் தருவேன் என, விதவிதமான பொய்கள் சொல்லி, அவர்களை நம்ப வைத்து, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளேன்.

இதற்காக கூட்டாளி அசோகனுடன் சேர்ந்து, சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில், போலி கால்சென்டர் நடத்தி வந்தேன். இந்த இடத்தில் எங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. எனவே, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலைக்கு இடம் பெயர்ந்தேன்.

அதேபோல, தேனாம்பேட்டையிலும் போலி கால்சென்டர் நடத்தி வந்தேன். என்னிடம், 500க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், இளைஞர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களுக்கு மோசடி செய்யும் தொகைக்கு ஏற்ப சம்பளம் கொடுத்து வந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us