Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ வருடாந்திர 'பாஸ்டேக் பாஸ்' தெரிந்ததும் தெரியாததும்

வருடாந்திர 'பாஸ்டேக் பாஸ்' தெரிந்ததும் தெரியாததும்

வருடாந்திர 'பாஸ்டேக் பாஸ்' தெரிந்ததும் தெரியாததும்

வருடாந்திர 'பாஸ்டேக் பாஸ்' தெரிந்ததும் தெரியாததும்

ADDED : ஜூன் 24, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
ரூ. 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி, வருடாந்திர 'பாஸ்டேக் ' வாங்கி கொண்டால், 200 தடவை டோல்கேட்டை கடந்து சென்று வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது, அனைவரும் அறிந்ததே. இதை பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

வரும், ஆக., 15ம் தேதி முதல் வருடாந்திர பாஸ் திட்டம் அறிமுகமாக உள்ளது. இந்த பாஸ் செயல்பாட்டுக்கு வரும் நாளில் இருந்து, ஓராண்டுக்கு செல்லுபடியாகும். அல்லது, 200 முறை டோல்கேட்டுகளை கடந்து செல்லலாம். இதில், எது அதிகமோ அதுவரை பாஸ் செல்லுபடியாகும்.

வணிக நோக்கமில்லாத தனியார் வாகனங்களுக்காக, இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கார், ஜீப், வேன்களுக்கு இது பயன் அளிக்கும்.

இந்த பாஸ், நாடு முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய எக்ஸ்பிரஸ் டோல் பிளாசாக்களில், இலவசமாக பயணிக்க அனுமதிக்கிறது. ஆனால் மாநில அரசுகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் சாலைகளில் உள்ள, சுங்க சாவடிகளில் இதை பயன்படுத்த முடியாது. அத்தகைய சுங்க சாவடிகளில் வழக்கமான பாஸ் டேக்கில் பயணிக்கலாம்.

இந்த பாஸை பெறவும், புதுப்பிக்கவும், ராஜ் மார்க் யாத்திரா செயலி மற்றும் என்.எச்.ஏ.ஐ., என்ற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளங்களில் விண்ணப்பித்து, உரிய கட்டணத்தை செலுத்தி பெறலாம்.

ஏற்கனவே பாஸ்டேக் வைத்திருப்போர், புதிய வருடாந்திர பாஸ் டேக் வாங்க வேண்டியது இல்லை. ஆக., 15 க்குப்பின், பழைய பாஸ் டேக்கை கொண்டு, வருடாந்திர பாஸ் டேக் முறைக்கு புதுப்பித்து கொள்ளலாம்.

இந்த புதிய நடைமுறை கட்டாயம் அல்ல. விருப்பம் உள்ளோர் புதிய நடைமுறைக்கு மாறி பயன் பெறலாம். வருடாந்திர பாஸ்டேக் முடிந்தபின், தானாகவே வழக்கமான பாஸ் டேக்கிற்கு அது மாறி விடும்.

எந்த வாகனத்திற்காக விண்ணப்பித்தோமோ, அந்த வாகனத்துக்கு மட்டுமே இதை பயன்படுத்த முடியும். வேறு வாகனத்திற்கு வருடாந்திர பாஸ் டேக்கை மாற்ற முடியாது.

மாநில அரசுகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் சாலைகளில் உள்ள, சுங்க சாவடிகளில் இதை பயன்படுத்த முடியாது. அத்தகைய சுங்க சாவடிகளில் வழக்கமான பாஸ் டேக்கில் பயணிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us