கட்டுகோப்பாக நடந்த முருக பக்தர் மாநாடு; அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடம்
கட்டுகோப்பாக நடந்த முருக பக்தர் மாநாடு; அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடம்
கட்டுகோப்பாக நடந்த முருக பக்தர் மாநாடு; அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடம்

இந்த மாநாடு ஏன்
இந்தியா முழுவதும் கடவுள் முருகன் பல்வேறு பெயர்களில் வழிபட்டாலும், அறுபடை வீடுகள் தமிழகத்தில் தான் அமைந்துள்ளது. தமிழர் வாழ்வியலில் முருகன் நீக்கமற நிறைந்துள்ளார். முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடல் இழிவுபடுத்தப்பட்ட விவகாரத்தின் போது அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை என்பது பக்தர்களின் வருத்தம். தொடர்ந்து சென்னிமலை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தையடுத்து முருகன் மலையை காக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து முன்னணி இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
கந்த சஷ்டி கவசம்
மாநாட்டில் முக்கிய நிகழ்வாக கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது.
எங்கும் ஒழுங்கு, கட்டுப்பாடு
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வந்த பக்தர்களை, ஹிந்து முன்னணியை சேர்ந்த சுமார் 2,000 தொண்டர்கள் வழிநடத்தினர். மாநாட்டை காணும் ஆர்வத்தில் சிலர் போட்டி போட்டுக் கொண்டு மாநாட்டு திடல் முன்பு வந்தனர். மாநாட்டை நடத்திய நிர்வாகிகள், இருக்கையில் அமரும்படி அறிவுறுத்தியதும் அவர்கள் அமைதியாக போய் அமர்ந்தனர். வாசலில் இருந்து போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினாலும், மாநாட்டு திடலில் போலீசார் மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் நின்றனர். என்றாலும் எந்த சலசலப்பும் இல்லாமல், கட்டுப்பாட்டோடு பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.