தபால் துறையின் 'டிஜிபின்' டிஜிட்டல் முகவரி அறிமுகம்
தபால் துறையின் 'டிஜிபின்' டிஜிட்டல் முகவரி அறிமுகம்
தபால் துறையின் 'டிஜிபின்' டிஜிட்டல் முகவரி அறிமுகம்

டிஜிபின் எதற்கு?
இடம் சார்ந்த துல்லியமான அடையாளத்தை வழங்குவதன் வாயிலாக, முகவரியை கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது. குறிப்பாக கிராமப்புறங்கள், காடுகள் மற்றும் கடல்கள் போன்ற நிலையான முகவரி இல்லாத இடங்களில் இது மிக உதவியாக இருக்கும்.
இணைய வசதி அவசியமா?
இல்லை. இதை இணையதள வசதி இல்லாமல் ஆப்லைனிலும் பயன்படுத்தலாம்.
டிஜிபின் பெறுவது எப்படி?
அதிகாரப்பூர்வ வலைதளம் https://dac.indiapost.gov.in/mydigipin/home இதில் உங்கள் இருப்பிடத்தை உள்ளிடவும். தாமாகவும் உள்ளிடலாம், மொபைல் லொகேஷனையும் பயன்படுத்தலாம். உங்கள் இருப்பிடத்துக்கான தனிப்பட்ட 10 இலக்க டிஜிபின் உருவாக்கப்படும். இதை அரசு சேவைகள், டெலிவரி மற்றும் முகவரி சரிபார்ப்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.
இதனால் தபால் முகவரி மாறுமா?
மாறாது.
வேறு என்ன பயன்?
துல்லியமான இடத்தை அடையாளப்படுத்துவதால், அவசர கால சூழலில் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். நகர்ப்புறம், கிராமப்புறம் மற்றும் தொலைதுார பகுதிகள் என அனைத்து இடங்களிலும் செயல்படும்.
பாதுகாப்பானதா?
எந்த வித தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்கவோ, வெளிக்காட்டவோ இடமில்லை. இதனால், தனியுரிமைக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்து இல்லை.