பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் பேச்சு: வழக்குப்பதிவு செய்து தேடும் போலீஸ்
பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் பேச்சு: வழக்குப்பதிவு செய்து தேடும் போலீஸ்
பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் பேச்சு: வழக்குப்பதிவு செய்து தேடும் போலீஸ்

அனுமதி கூடாது:
நாகப்பட்டினம் அடுத்துள்ள நாகூரைச் சேர்ந்தவர் தங்க முத்துகிருஷ்ணன். சிவசேனா மாநில செயலரான இவரது மனைவி தங்கம் அம்மாள், கடந்த 1995ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி பார்சல் வெடிகுண்டு வாயிலாக படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து, ஆண்டுதோறும் தங்கம் அம்மாள் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு ஹிந்து அமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று வருகின்றனர்.
'மத உணர்வுகளை துாண்டவில்லை'
இது தொடர்பாக தங்க முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் கூறியதாவது: தங்கம் அம்மாள் கொலையில், வெடிகுண்டு பார்சலை அனுப்பியது முஸ்லிம் தீவிரவாதிகள் என, போலீசார் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். அதனால், வழக்கில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக்கை முஸ்லிம் தீவிரவாதி என நாங்கள் குறிப்பிட்டு மேடையில் பேசினோம். அஸ்வத்தாமனும் அதையே வலியுறுத்திப் பேசினார். இதைத்தான் மத உணர்வை துாண்டும் பேச்சு என போலீஸ் சொல்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.