Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/நல்லாசிரியர் விருது தேர்வில் ஒழியுமா அரசியல் சிபாரிசு

நல்லாசிரியர் விருது தேர்வில் ஒழியுமா அரசியல் சிபாரிசு

நல்லாசிரியர் விருது தேர்வில் ஒழியுமா அரசியல் சிபாரிசு

நல்லாசிரியர் விருது தேர்வில் ஒழியுமா அரசியல் சிபாரிசு

UPDATED : ஜூலை 20, 2024 07:27 AMADDED : ஜூலை 20, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
மதுரை : கல்வித்துறையில் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் 'நல்லாசிரியர் விருது' என்பது அவர்களின் பணிக்கால கனவு. திறமையான 80 சதவீதம் ஆசிரியர்களுக்கு இவ்விருது இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. இதற்கு காரணம் அரசியல் சிபாரிசும், அதிகாரிகள் லாபியும் தான் என்கின்றனர் ஆசிரியர்கள்.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு அந்நாளில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகின்றன. இந்தாண்டு பள்ளிக் கல்வியில் 171, தொடக்க கல்வியில் 171, மெட்ரிக்கில் 38, ஆங்கிலோ இந்தியன், சமூக பாதுகாப்புத்துறை, மாற்றுத்திறனாளி பிரிவுகளில் தலா இருவர் என 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

இதற்காக மாவட்டம் வாரியாக தகுதியான ஆசிரியர்களிடமிருந்து ஜூலை 16 முதல் 24 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு கல்வித்துறை இணையதளமான 'எமிஸில்' பதிவேற்றம் செய்யும் பணி துவங்கியுள்ளது. இதற்காக மாவட்டங்களில் சி.இ.ஓ., தலைமையில் தேர்வுக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுக்கள் ஆக., 14க்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆண்டுதோறும் இவ்விருது தேர்வில் அதிக எண்ணிக்கையில் அரசியல் சிபாரிசும், அதிகாரிகள் லாபியும் உள்ளது. இந்தாண்டு திறமையான ஆசிரியர்களும் அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்ட பட்டியல் வெளியிட வேண்டும்


இதுகுறித்து ஆசிரியர்கள்

கூறியதாவது: நேர்மையான அதிகாரி என ஆசிரியர்களால் சுட்டிக்காட்டப்படும் இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் இந்தாண்டு நல்லாசிரியர் விருது தேர்வும் நேர்மையாக நடக்க வேண்டும். இவ்விருதுக்கான தேர்வு பட்டியல் வழிகாட்டுதல் நெறிமுறையில் 'அரசியல் ரீதியாக, கல்வியில் வணிக ரீதியாக செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்யக் கூடாது' என இயக்குநர் 'கறார்' காட்டியுள்ளது ஆறுதல் அளிக்கிறது.

அதேநேரம் மாவட்டங்களில் அமைச்சர்கள் சிபாரிசு, கல்வி அதிகாரிகள் லாபி என்பது மறைமுகமாக இவ்விருது தேர்வில் கோலோச்சுகிறது.

விருதுக்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் பலர் தேர்வாவது ஒவ்வொரு ஆண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும். இதனால் தகுதியான ஆசிரியர்கள் 80 சதவீதம் பேர் விருதுக்கு விண்ணப்பிப்பதே இல்லை. மாவட்ட அளவிலான தேர்வு நடைமுறையும் அதிகாரிகளால் ரகசியம் காக்கப்படுகிறது.

'தகுதி இருந்தால் விருது கிடைக்கும்' என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கு ஏற்பட வேண்டும். இதற்காக மாவட்டம் வாரியாக சி.இ.ஓ.,க்கள் பரிந்துரைத்து இயக்குநருக்கு அனுப்பும் ஆசிரியர் இறுதி பட்டியலை அந்தந்த மாவட்டங்களில் வெளியிட வேண்டும். இப்பட்டியலில் உள்ள அனைவரையும் விருதுக்கு தேர்வு செய்ய முடியாது. ஆனால் பட்டியலில் இல்லாதவர் விருதுக்கு தேர்வாகி விடக்கூடாது என்ற வெளிப்படை தன்மை வேண்டும்.

திறமையான ஆசிரியர்களுக்கு இந்தாண்டு அதிக எண்ணிக்கையில் விருது கிடைக்க இயக்குனர் கண்ணப்பன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us