Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ போத்தனுாரில் புது ரயில் முனையம் அமைக்க தொழில் அமைப்புகள் கோரிக்கை

போத்தனுாரில் புது ரயில் முனையம் அமைக்க தொழில் அமைப்புகள் கோரிக்கை

போத்தனுாரில் புது ரயில் முனையம் அமைக்க தொழில் அமைப்புகள் கோரிக்கை

போத்தனுாரில் புது ரயில் முனையம் அமைக்க தொழில் அமைப்புகள் கோரிக்கை

UPDATED : ஜூலை 20, 2024 04:44 AMADDED : ஜூலை 19, 2024 11:35 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

போத்தனுாரில் புதிய ரயில் முனையத்தை அமைக்க வேண்டுமென்று, மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோவை தொழில் அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை, கொங்கு குளோபல் போரம், கொடிசியா, சீமா, ராக், கோவை வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஏ.டி.எப்.சி.,) ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், மேட்டுப்பாளையத்தில் மத்திய அமைச்சர் முருகனை சந்தித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வைத்துள்ள கோரிக்கைகள் சார்ந்த மனுவை, நேரில் கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

கோவையின் வேகமான வளர்ச்சியின் காரணமாக, இங்கு கூடுதலாக ஒரு ரயில் முனையம் அமைக்க வேண்டியது அவசர அவசியமாகவுள்ளது. போத்தனுாரில் புதிய ரயில் முனையத்தை அமைப்பதுடன், அங்கு பிட் லைன், ஸ்டேபிளிங் லைன், பெட்டிகள் பராமரிப்பு, ரயில்களை கழுவுவதற்கான தண்ணீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.

கோவை மாநகராட்சிப் பகுதியிலேயே அமைந்திருப்பதால், அதற்கு கோயம்புத்துார் தெற்கு சந்திப்பு என்று பெயர் மாற்ற வேண்டும். போத்தனுார் சந்திப்பில் ரோட்டுக்கு அருகில் வடக்குப் பகுதியில் ஒரு நுழைவாயில் அமைத்துக் கொடுக்க வேண்டும்; அது நகருக்குள் இருந்து வரும் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

கோவை-மங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம்-துாத்துக்குடி வாரமிரு முறை ரயில்களை போத்தனுாரில் சிறிது நேரம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஈரோடு-திருச்சி இடையே இயக்கப்படும் ரயிலை, ஒரு புறத்தில் காரைக்காலுக்கும், மறுபுறத்தில் கோவைக்கும் நீட்டித்து கோவை-காரைக்கால் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க வேண்டும்.

தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் தரக்கூடிய கோவை சந்திப்பிலிருந்து, வழிபாட்டுத் தலங்களுக்கு போதிய ரயில் வசதியில்லை. டெல்டா மாவட்டங்களில் நவக்கிரக கோவில்கள், தஞ்சை, திருநள்ளாறு, ஈஸ்வரன் கோவில், திருக்கடையூர், காரைக்கால், நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு இந்த ரயில் பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

போத்தனுாரில் புதிய ரயில்வே முனையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு, அப்பகுதி மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், போத்தனுார் சந்திப்புக்கு 'கோயம்புத்துார் தெற்கு' என்று பெயர் மாற்றுவதற்கு, போத்தனுார் ரயில் பயணர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்போதுள்ள போத்தனுார் சந்திப்பு என்ற பெயரே தொடர வேண்டுமென்று இந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவை ரயில்வே ஸ்டேஷன், ரயில் சந்திப்பு அல்ல; அது ரயில்கள் கடந்து செல்லும் ஒரு ரயில்வே ஸ்டேஷன்; எனவே போத்தனுார் சந்திப்பை கோயம்புத்துார் சந்திப்பு என்றும், கோவை சந்திப்பை கோயம்புத்துார் சிட்டி ஸ்டேஷன் என்றும் அழைக்கலாம் என்றும், ரயில்வே அமைச்சகத்துக்கு இந்த சங்கத்தின் சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us