கனிமொழிக்கா.. டி.ஆர்.பாலுவுக்கா.. லோக்சபாவில் யாருக்கு முன்வரிசை 'சீட்?'
கனிமொழிக்கா.. டி.ஆர்.பாலுவுக்கா.. லோக்சபாவில் யாருக்கு முன்வரிசை 'சீட்?'
கனிமொழிக்கா.. டி.ஆர்.பாலுவுக்கா.. லோக்சபாவில் யாருக்கு முன்வரிசை 'சீட்?'

ஆலோசனைக் கூட்டம்
இதுவரை, பல ஆண்டுகளாக மூத்த தலைவரான டி.ஆர்.பாலுதான், பார்லிமென்டில் தி.மு.க.,வின் முகமாக அறியப்பட்டு வந்தார். எந்த கூட்டமாக இருந்தாலும், எந்த ஆலோசனையாக இருந்தாலும், எந்த சந்திப்பாக இருந்தாலும், அவர்தான் பிரதானமாக இருந்து வழி நடத்துவார். லோக்சபாவிலும், அவர்தான் சபையின் முன் இருக்கையில் அமர்ந்து, தேவைப்படும்போது எழுந்து கேள்விகளை எழுப்புவார். தி.மு.க.,வுக்கு என்று, பார்லிமென்டிற்குள் ஒரு கட்சி அலுவலகம் உள்ளது. அங்கு எப்போதாவது ஒருமுறை எம்.பி.,க்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவது உண்டு.
பரபரப்பு
இந்நிலையில்தான், இருக்கையை கைப்பற்றப் போவது பார்லிமென்ட் கட்சித் தலைவரா, கட்சியின் சபைத் தலைவரா என்ற குழப்பம் முதன்முறையாக ஏற்பட்டுள்ளது. இதில், சீனியாரிட்டி என்ற விவகாரமும் அடங்கியுள்ளதால், முன்வரிசை இருக்கையை, கனிமொழிக்கு பாலு தாரை வார்ப்பாரா அல்லது தன்வசம் வைத்துக் கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.