கோயில்களில் சர்வர் பிரச்னையால் கட்டண ரசீது வழங்குவதில் சிக்கல்; தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது
கோயில்களில் சர்வர் பிரச்னையால் கட்டண ரசீது வழங்குவதில் சிக்கல்; தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது
கோயில்களில் சர்வர் பிரச்னையால் கட்டண ரசீது வழங்குவதில் சிக்கல்; தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது
ADDED : ஜூலை 02, 2024 11:10 PM

மதுரை : தமிழகத்தில் அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் சர்வர் பிரச்னையால் பக்தர்களுக்கு கட்டண ரசீது தருவதில் தாமதம் ஏற்படுவதால் ஊழியர்களுடன் தகராறு ஏற்படுகிறது. அடிக்கடி நடக்கும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இத்துறையின்கீழ் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. பக்தர்களின் வசதிக்காகவும், முறைகேடுகளை தடுக்கவும் கம்ப்யூட்டர் மற்றும் கையடக்க கருவி மூலம் அனைத்து வித கட்டணங்களுக்கும் ரசீது வழங்கப்படுகிறது. இதற்காக தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு சர்வர் மூலம் கட்டணம் பெறப்படுகிறது. பெரும்பாலான ரசீதுகளில் ஆங்கிலத்தில் மட்டுமே கட்டண விபரம் இருக்கிறது.
சனி, ஞாயிறு மற்றும் திருவிழா காலங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் போது தொழில்நுட்ப கோளாறால் சர்வர் பாதிக்கப்பட்டு ரசீது கொடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
சர்வர் சரியாகும் வரை காத்திருக்குமாறும், ரசீது பெற்ற பிறகே தரிசனத்தற்கு செல்ல முடியும் என்று கூறுவதாலும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்படுகிறது. ஜூன் 28, 30ல் சர்வர் பிரச்னை ஏற்பட்டு ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
அவர்கள் கூறுகையில், 'அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. சர்வர் பாதிக்கும்போது அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு ஒரு சர்வர் மூலம் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சர்வரை பயன்படுத்த ரூ.பல கோடி வரை அறநிலையத்துறை செலவழித்தும் பயனில்லை,' என்றனர்.