ஸ்கந்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது
ஆக 10, 2023
Advertisement
அகண்டா பட இயக்குனர் போயபட்டி சீனு இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் படம் "ஸ்கந்தா" . கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இப் படத்திலிருந்து டீசர், பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் பிரமாண்ட அரங்கு அமைத்து நடைபெற்ற கடைசி பாடல் காட்சியோடு ஸ்கந்தா படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்குகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!