
கேங்ஸ்டராக நாகார்ஜூனா... முதல்வராக தபு...
மே 07, 2026
Advertisement
தெலுங்கு சினிமாவின் மூத்த மற்றும் முன்னணி நடிகர் நாகர்ஜூனா. இதுவரை 99 படங்களில் நடித்துவிட்டார். தற்போது 100வது படத்தில் நடிக்கிறார். இதை தமிழில் ‛நித்தம் ஒரு வானம்" படத்தை இயக்கிய ரா.கார்த்திக் இயக்குகிறார். நாகார்ஜூனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவே தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தபு , ஐஸ்வர்யா ராஜேஷ், சுஷ்மிதா பட் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் பீரியட் காலகட்டத்தில் உருவாகிறதாம். இதில் நாகர்ஜூனா ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும், நடிகை தபு முதல்வர் கதாபாத்திரத்திலும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!