
தமிழ் சினிமாவிற்கு வரும் ‛ஜெர்ஸி பட இயக்குனர்
மே 07, 2026
Advertisement
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் கவுதம் தின்னனுரி. நானியை வைத்து ‛ஜெர்ஸி" எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்து விஜய் தேவரகொண்டாவை வைத்து ‛கிங்டம்" என்ற படத்தை எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் கவுதம் தின்னனுரி. இந்தமுறை இந்த படத்தை தெலுங்கில் இயக்காமல் தமிழில் எடுக்க முடிவெடுத்துள்ளார். இதற்காக தமிழ் பட தயாரிப்பாளர்கள் மற்றும் சில நடிகர்களிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கதை விவாதம் தொடர்பான பணிகளும் நடந்து வருகின்றன. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!