
மீண்டும் ஒரு அரசியல் நையாண்டி படம்
தற்போது அதே சாயலில் உருவாகி வரும் அரசியல் நையாண்டி படம் "மக்கள் தலைவா". இந்த படத்தை பழகிய நாட்கள், மூன்றாம் மனிதன் படங்களை இயக்கிய ராம்தேவ் இயக்குகிறார். ரவிமரியா கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் ராதாரவி, இயக்குனர் பேரரசு, கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார், துளசி ராயன் இசை அமைக்கிறார். கவிதாலயா சரவணன், சந்திரசேகர், ராம்குமார் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தில் பல அரசியல் கட்சிகளை விமர்சிக்கப்பட்டு காட்சிகள் இடம் பெற்றிருப்பதை படத்தின் டிரைலர் உறுதி செய்திருக்கிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!