
மழையால் எல்ஐகே விழா தள்ளி வைப்பு
ஆனால், சென்னையில் இன்று நண்பகல் திடீரென அரை மணி நேரத்திற்கும் மேலாக கடும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பித்து அதிகமாக இருந்த நிலையில் இந்த திடீர் மழை சென்னை மக்களை குளிர வைத்தது.
அதே சமயம், "எல்ஐகே" படக்குழுவுக்கு இந்த மழை அவர்களது ராசியான "தள்ளி வைப்பு" என்பதை மீண்டும் நிகழ்த்தியுள்ளது. ஏற்கெனவே, இந்தப் படம் மூன்று முறை வெளியீடு அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. அந்த ராசி படத்தின் விழாவுக்குக் கூட இயற்கையாக அமைந்துவிட்டது. இன்று தள்ளி வைக்கப்பட்டாலும் நாளை மீண்டும் விழா நடக்கும் எனத் தெரிகிறது.
இந்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாக உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!