
விஜய் சுட்ட 13வது ஆள் நான் தான் : விக்னேஷ் சிவன்
போடா போடி படம் விஜய்யின் துப்பாக்கி படத்துடன் போட்டியிட்டது குறித்து அவர் கூறியதாவது, " "போடா போடி" திரைப்படத்தின் இயக்குனராக நான் ஒப்பந்தம் ஆன போது எனக்கு 22 வயது. ஆனால், அப்படம் வெளியாகும் போது எனக்கு 27 வயது ஆகிவிட்டது. அதுவரை ஏதாவது ஒரு தாமதம் நடந்து கொண்டே இருந்தது. இறுதியாக, நடிகர் விஜய்யின் "துப்பாக்கி" படத்துடன் "போடா போடி" வெளியானது. துப்பாக்கி படத்தின் இடைவேளையில் நடிகர் விஜய் 12 நபர்களைச் சுட்டுக் கொல்வார். உண்மையில் அவர் சுட்டது 13 பேர். அந்த 13வது ஆள் வேறு யாருமில்லை நான் தான்" என தெரிவித்துள்ளார்.
அதாவது ‛துப்பாக்கி" படத்துடன் தன் படம் வெளியாகி வரவேற்பு பெறாமல் போனதை தான் இப்படி கலகலப்பாக கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!