
ஓஜி இயக்குனருக்கு பவன் கல்யாண் கார் பரிசளித்தது ஏன்?
அவருக்கு பவன் கல்யாண் அந்த காரை ஏன் பரிசாக வழங்கினார் என்பதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. "ஓஜி" படத்திற்கான சில முக்கிய காட்சிகளை ஜப்பான் நாட்டில் படமாக்க நினைத்தாராம் இயக்குனர் சுஜித். ஆனால், தயாரிப்பு நிறுவனம் பட்ஜெட்டைக் காட்டி அதற்கு மறுத்துவிட்டதாம். இருந்தாலும் தான் நினைத்ததைப் படமாக்க வேண்டும் என்று நினைத்த சுஜித், அவரிடமிருந்த "லேண்ட் ரோவர் டிபெண்டர்" காரை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து ஜப்பான் சென்று அவர் எடுக்க நினைத்த காட்சிகளை எடுத்து வந்தாராம்.
சுஜித்தின் இந்த அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவற்றைப் பற்றி டப்பிங் பேசிய போது தெரிந்து கொண்ட பவன் கல்யாண், புதிதாக "லேண்ட் ரோவர் டிபெண்டர்" கார் ஒன்றை வாங்கி அதை சுஜித்திற்குப் பரிசளித்துள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!