
ரவி மோகனுக்கு 2025 பொங்கலில் வந்த ஒரு படம், அடுத்து 2026 பொங்கலுக்கும் ஒரு படம்
அதற்குப் பின் இந்த வருடத்தில் ரவி மோகன் நடித்து எந்தப் படமும் வரவில்லை. ஆனால், 2026 பொங்கலுக்கு அவர் வில்லனாக நடித்துள்ள "பராசக்தி" படம் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் தான் படத்தின் கதாநாயகன் என்றாலும் படத்தின் கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் நடிக்க சம்மதித்துள்ளார் ரவி மோகன். இப்படத்தின் புரமோஷன்கள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன.
ரவி மோகன் என பெயரை மாற்றி முதலில் கதாநாயகனாகவும், அடுத்து வில்லனாக நடிக்க சம்மதித்ததும் ஆச்சரியம்தான்.
அடுத்து "கராத்தே பாபு, ஜீனி, ப்ரோ கோட்" ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரவி மோகன். அதோடு யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் "ஆன் ஆர்டினரி மேன்" படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார். இவற்றில் "ப்ரோ கோட், ஆன் ஆர்டினரி" ஆகிய படங்களை அவரது சொந்தத் தயாரிப்பாக புதிதாக ஆரம்பித்த ரவி மோகன் ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கிறார். இவை அனைத்தும் அடுத்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!