
குட் பேட் அக்லி மற்றும் ஓஜி ஒரே கதையா : இயக்குனர் பதில்
அவற்றிற்கு "ஓஜி" படத்தின் இயக்குனர் சுஜித் பதிலளித்துள்ளார். “ஆதிக் ரவிச்சந்திரன் "குட் பேட் அக்லி" படத்தின் ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பிக்கும் முன்பே, நான் "ஓஜி" கிளிம்ப்ஸை வெளியிட்டேன். அவரை எனக்கு நன்கு தெரியும். அவர் என்னையும் என் வேலையையும் உண்மையாக விரும்புகிறார்.
"த்ரிஷா இல்லனா நயன்தாரா" காலத்திலிருந்து அவரைத் தெரியும். "குட் பேட் அக்லி" குழு "ஓஜி சம்பவம்" என்ற பாடலை வெளியிட்டது. பொதுவாக, முதலில் வெளியாகும் பொருள் அசலாகக் கருதப்படும். அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை, ஆனால் என் படம் விமர்சிக்கப்பட்டது.
எனக்கு "மார்க் ஆண்டனி" பிடித்திருந்தது, ஆதிக் மிகவும் திறமையானவர் என்று உணர்ந்தேன். "குட் பேட் அக்லி" படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தார். அஜித் படத்திற்கு அவர் ஒப்பந்தமாகும் நேரத்தில், நாங்கள் ஏற்கனவே "ஓஜி" படத்தில் அவரது பகுதிகளை படமாக்கத் தொடங்கியிருந்தோம். எங்கள் படம் தாமதமானதால், ஒப்பீடுகள் தவிர்க்க முடியாதவை," என்று கூறியுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!