
17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் நெகிழ்ச்சி
எங்க குடும்பத்துல யாரும் சினிமா பேக்கிரவுண்ட் கிடையாது. அப்பா டீக்கடையில வேலை பார்த்தவரு. ஆனா, அவருக்கு நான் சினிமாவில் ஹீரோ ஆகணும்னு ஆசை இருந்தது. அவர் கனவையும் நனவாக்கி இருக்கிறேன். ஆரம்பத்துல எப்படி சினிமாவுக்கு போகணும்னு தெரியலை. எங்கயோ சுற்றி பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் நடித்தேன். ஓரளவு பிரபலம் ஆனேன். இந்த படத்தோட பேரு குமார சம்பவம்.
இது, என் வாழ்க்கையில் முக்கியமான சம்பவமும் கூட. பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்புக்கு போகும்போது சினிமாவுக்கும் இப்படி போகணும்னு நினைச்சிட்டு இருந்தேன், அது நடந்து இருக்கிறது. இந்த பட இயக்குனர் பாலாஜி வேணுகோபால் யுடியூப் நடத்திக் கொண்டு இருந்தபோது, அதுல நடிச்சு இருக்கிறேன். இந்த படத்தை குடும்பத்தோட பார்க்கலாம். முகம் சுளிக்கும் காட்சிகள் இருக்காது"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!