
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்
இந்த படம் குறித்த ஒரு தகவலை இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதில், படத்தின் முக்கியமான காட்சிகள் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருவதாகவும், கடைசி இரண்டு நாள் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக தெரிவித்திருக்கின்றார். அதோடு, மலேசியாவில் உள்ள இரட்டை கோபுரத்தின் புகைப்படத்தை வெளியிட்டு, கடைசி இரண்டு நாள் படப்பிடிப்பு. இந்த ஊரை ரொம்பவே மிஸ் பண்ண போறோம் என்றும் ஒரு பதிவு போட்டுள்ளார். இதைவைத்து பார்க்கும்போது, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்பு இதோடு முடிவடைகிறது என்பது தெரிய வந்துள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!