
தேசிய போர் நினைவிடத்தில் சாய் பல்லவியின் வீர வணக்கம்
இப்படத்திற்காக சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படக்குழுவினர் சென்று படத்தை புரமோஷன் செய்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று வீர வணக்கம் செலுத்தியுள்ளார் சாய் பல்லவி. “அமரன்" படத்திற்கான புரமோஷனை ஆரம்பிப்பதற்கு முன்பாக தேசிய போர் நினைவிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்றேன். நமக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு துணிச்சலான இதயத்தின் நினைவாக இந்த புனிதமான கோவிலில் ஆயிரக்கணக்கான "செங்கல் போன்ற மாத்திரைகள்" உள்ளன. மேஜர் முகுந்த் வரதராஜன், சிப்பாய் விக்ரம்சிங் ஆகயோருக்கு மரியாதை செலுத்தும் போது நான் உணர்ச்சிகளால் நிறைந்திருந்தேன். நன்றி மற்றும் வீர வணக்கங்கள்,” என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!