
தமிழ், தெலுங்கு - ஜிவி பிரகாஷுக்கு டபுள் தீபாவளி
இந்த வருட தீபாவளி, ஜிவிக்கு டபுள் தீபாவளி. தமிழில் "அமரன்" படமும், தெலுங்கில் "லக்கி பாஸ்கர்" படமும் வெளியாக உள்ளது. இரண்டு படங்கள் மீதே எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
“அமரன், லக்கி பாஸ்கர்," ஆகிய படங்கள் அந்தந்த மொழிகளில் ப்ளாக் பஸ்டர் ஆவதற்கான வேரூன்றி உள்ளது. இரண்டு படங்களையும் பார்த்த பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். மிக்க நன்றி,” என ஜிவி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் தமிழில் "கேப்டன் மில்லர், தங்கலான்" ஆகிய படங்கள் ஜிவியின் இசையைப் பற்றிப் பாராட்டிப் பேச வைத்த படங்கள். அது போல "அமரன், லக்கி பாஸ்கர்" படங்களும் அமையலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!