
தி கோட் 4வது பாடல் வீக் என்ட் வெளியீடு
இதற்கு முன்பு, “விசில் போடு, சின்னச் சின்ன கண்கள், ஸ்பார்க்" ஆகிய பாடல்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சிங்கிள், சிங்கிளாக வெளியாகின. அடுத்து நாளை மறுதினம் ஆகஸ்ட் 31ம் தேதி 4வது சிங்கிளாக ஒரு பாடலை வெளியிட உள்ளார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
அந்தப் பாடல் விஜய், த்ரிஷா இணைந்து அதிரடியாக நடனமாடியுள்ள பாடல் என்று சொல்கிறார்கள். படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக அந்தப் பாடலும் இருக்கும் என்கிறார்கள். இந்த வீக் என்ட்-ல் பாடலை வெளியிட்டு "வைப்" ஏற்படுத்தி அப்படியே ரிலீஸ் வரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம்.
முந்தைய மூன்று பாடல்களுக்குக் கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் நான்காவது பாடல் "நச்" என்று இருக்குமா என்பது வெளியாக உள்ள முதல் "புரோமோ"விலேயே தெரிந்துவிடும்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!