
ஏப்ரல் 14ல் வெளியாகும் எல்.ஐ.சி பட டீசர்
ஏப் 02, 2024
Advertisement
லவ் டூடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் "எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்) என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சீமான், எஸ்.ஜே.சூர்யா, கிர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு கோவை, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!