
ஆதிபுருஷ் - தெலுங்கு வியாபாரம் எவ்வளவு ?
சுமார் 500 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான தியேட்டர் வெளியீட்டு உரிமை 120 கோடிக்கும், அனைத்து மொழிகளுக்குமான ஓடிடி உரிமை 250 கோடிகளுக்கும் விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். மற்ற மொழிகளுக்குமான தியேட்டர் உரிமைகளைச் சேர்த்தால் படத்தின் பட்ஜெட் அளவிற்கு வியாபாரம் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இருப்பினும் பிரபாஸ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த "பாகுபலி 2, சாஹோ" ஆகிய படங்களின் வியாபார அளவிற்குத்தான் இந்த "ஆதிபுருஷ்" படத்தின் வியாபாரமும் நடந்துள்ளதாம். "சாஹோ, ராதேஷ்யாம்" ஆகிய படங்கள் தெலுங்கில் வெற்றி பெறாத காரணத்தால் இந்தப் படத்திற்கான வியாபாரம் உயரவில்லை என்று சொல்கிறார்கள்.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகியவற்றைச் சேர்த்து நடந்துள்ள 120 கோடி வியாபாரத்தை நஷ்டமில்லாமல் மீட்க 200 கோடி வரை வசூலித்தாக வேண்டுமாம். தெலுங்கு ரசிகர்கள் எப்படியும் படத்தை வெற்றி பெறச் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை படக்குழுவினருக்கு இருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!