
போட்டி இல்லாமல் வெளியாகும் பொம்மை
இந்தப் படங்கள் தவிர ஹிந்தி, தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகியுள்ள "ஆதிபுருஷ்" படமும் ஜுன் 16 வெளியாகிறது. இந்தப் படத்தை பான் இந்தியா படமாக வெளியிடுகிறார்கள். தமிழகத்திலும் இப்படத்தை நிறைய தியேட்டர்களில் வெளியிட முயற்சித்து வருகிறார்கள். ஆனால், தமிழில் இப்படத்திற்காக இதுவரையிலும் எந்த விதமான புரமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இன்னும் சில நாட்களில் படம் வெளியாக உள்ளதால் நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இப்படத்தை ஹிந்தி, தெலுங்கில் மட்டும் தயாரித்துள்ளதால் அங்கு அதிக புரமோஷன்களை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் ஜுன் 9ம் தேதி வெளியான படங்களில் "போர் தொழில்" படத்திற்கு மட்டும் வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த வாரம் ஜுன் 23ம் தேதியும் நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளது. ஆனால், அவை சிறிய பட்ஜெட் படங்கள்தான். ஜுன் 29ம் தேதி "மாமன்னன்" படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!