
அண்ணனுடன் மிஸ் ஆன வாய்ப்பு : தம்பி கார்த்தியோடு ஜோடி சேர்ந்த கிரித்தி ஷெட்டி
தமிழில் "த வாரியர்" படம் மூலம் கடந்த வருடம் அறிமுகமானார் கிர்த்தி. ஆனால், அந்தப் படம் இங்கு ஓடவில்லை. அடுத்து முன்னணி நடிகரான சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கலாம், தமிழிலும் தடம் பதிக்கலாம் என நினைத்திருந்த கிரித்திக்கு அந்த வாய்ப்பும் எதிர்பாராமல் பறிபோனது. இப்போது சூர்யாவின் தம்பி கார்த்தியோடு ஜோடி சேரும் வாய்ப்பு வந்ததும் உடனடியாக நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார்.
நலன் குமாரசாமி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சைலன்ட்டாக ஆரம்பமாகி நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு கிர்த்தியும் நடித்து வருகிறாராம். வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள "கஸ்டடி" படத்திலும் கிர்த்திதான் கதாநாயகி. அடுத்து ஜெயம் ரவி நடிக்க உள்ள "ஜீனி" படத்திலும் நடிக்க உள்ளார் எனத் தெரிகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!