
தடை நீக்கம் : நாளை திட்டமிட்டபடி ருத்ரன் ரிலீஸ்
தயாரிப்பாளர் மேற்கொண்டு 4 கோடி ரூபாயைக் கேட்டதால் அந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இம்மாதம் 24ம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் தரப்பின் மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது. ஹிந்தி டப்பிங் ரைட்ஸிற்கும், படத்தை தியேட்டரிலோ, ஓடிடியிலோ வெளியிட எந்த சம்பந்தபமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டிய தயாரிப்பாளர் கதிரேசன் தரப்பு அதற்கான ஒப்பந்தத்தையும் காண்பித்துள்ளனர். அதை ஏற்று தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, "ருத்ரன்" படம் நாளை திட்டமிட்டபடி வெளியாக உள்ளது.
இதையடுத்து "தடைகளை வென்ற ருத்ரன்" என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "தர்மம் தலை காக்கும்" என படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸும் டுவீட் செய்துள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!