
புதுமுகங்கள் நடிக்கும் ‛ரேசர்
தந்தை மகனுக்கு இடையேயான பிரச்னையை மையமாக கொண்டு இதன் கதை அமைந்துள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக் ரேசர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் அகில் சந்தோஷ். ஆனால் அவர் கேட்கும் விலை உயர்ந்த ரேஸ் பைக்கை தந்தையால் வாங்கி தர முடியவில்லை. ஆனாலும் தனது லட்சியத்தில் பின்வாங்காத அகில் தானே கஷ்டப்பட்டு பைக் வாங்கி ரேஸில் சாதிக்க முயல்கிறார். இதற்கிடையில் அவர் சந்திக்கும் போராட்டங்கள் அதை மீறி அவரால் சாதிக்க முடிந்ததா என்பதை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது.
மோட்டார் ரேஸ் காட்சிகளில் நிஜ ரேஸ் வீரர்களுடன் ஹீரோ அகில் நடித்துள்ளார். படத்தை ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!