தனுஷூடன் மோதும் வைபவ்
மே 06, 2025
Advertisement
அறிமுக இயக்குனர்கள் விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் இருவரும் இணைந்து இயக்கியுள்ள புதிய படம் "சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்". நடிகர் வைபவ், நடிகை அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, மணி, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டி. இமான் இசையமைக்கும் இப்படத்தை பீ.டி.ஜி யூனிவர்சல் நிறுவனம் தயாரிக்கின்றது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திடீரென இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 20ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர் . ஏற்கனவே இதே தேதியில் தனுஷின் "குபேரா" படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது என அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!