
சிறிய மாற்றங்களுடன் கபாலி ரீ-ரிலீஸ் : தயாரிப்பாளர் தாணு தகவல்
ரஜினியின் திரையுலக பயணத்தில் அது ஒரு வித்தியாசமான படம் என்றாலும் அவரது வயதுக்கேற்ற கதையும் கதாபாத்திரமும் கூடவே ரஜினியும் அதை அனுபவித்து நடித்தார் என்றாலும் பெரும்பாலான ரஜினி ரசிகர்களுக்கு அந்த படம் முழு திருப்தியை அளிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் மாற்றம் இருந்திருக்கலாம், குறிப்பாக கிளைமாக்ஸ் வேறு மாதிரி இருந்திருக்கலாம் என்று படம் வெளியான பின் தங்களது கருத்தை தெரிவித்தார்கள். அதேசமயம் கபாலி படம் மிகப்பெரிய வெற்றி என்றும் இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினி படங்களில் அதிக வசூல் என்றும் தாணு அறிவித்தார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛‛கபாலி படத்தின் கிளைமாக்ஸில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ஆனால் இயக்குனர் பா ரஞ்சித் விருப்பப்படியே விட்டு விடுங்கள் என ரஜினிகாந்த் கூறிவிட்டதால், அதற்குமேல் அதில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல எப்படி கமல்ஹாசன் நடித்து, தோல்வி படமாக அமைந்த ஆளவந்தான் படத்தை மீண்டும் தன் ரசனைக்கு ஏற்றபடி ரீ எடிட் செய்து டிஜிட்டல் முறையில் மாற்றி வெளியிடும் வேலைகளை செய்து வருகிறாரோ, அதேபோல கபாலி படத்தையும் கிளைமாக்ஸை மாற்றி படத்தையும் சற்றே ட்ரிம் செய்து மீண்டும் ரீலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார் கலைப்புலி தாணு.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!