
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மோகன் ராஜாவின் மகன்!
இந்நிலையில் இவரது மகன் பிரணவ் மோகன் இப்போது குழந்தை நட்சத்திரமாக சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த தமிழரசன் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபாகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதையே இவரின் கதாபாத்திரத்தின் மூலம் தான் நகரும். அந்த அளவிற்கு கனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி, ‛டிக் டிக் டிக்" படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது போன்று இப்போது மோகன் ராஜா மகனும் இந்த படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!